கரூர் மாவட்டத்தில் 83.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Karur King 24x7 |12 Dec 2024 4:17 AM GMT
கரூர் மாவட்டத்தில் 83.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 83.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தென்கிழக்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை தொடர்ந்து நெருங்கி வருவதால் இன்று 27 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில்,நேற்று மாலை முதலே லேசாக துவங்கிய மழையானது நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் கனமழையாகவும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையாகவும் பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூரில் 4.00 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 1.20 மில்லி மீட்டர், அனைப்பாளையத்தில் 2.00 மில்லி மீட்டர், குளித்தலையில் 9.60 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகைமலையில் 23.20 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 8.40 மில்லி மீட்டர், மாயனூரில் 7.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 10.40 மில்லி மீட்டர், கடவூரில் 4.00 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 6.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 8.00 மில்லி மீட்டர் என மொத்தம் 83.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 6.98 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story