நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் அருகில் ரூ.85 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி - ஆக்கிரமிப்பால் தாமதம்
நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில், மேம்பால பணிகள் ரூ.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக, நெடுஞ்சாலை துறையினர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இதில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு கட்டி இருந்தனர். அந்த இடத்தை காலி செய்ய நகராட்சி சார்பில், கடந்த 6 மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேம்பால பணிகள் தடை பட்டதால், நேற்று நாகை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய பொக்லைன் இயந்திரங்களுடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டின் உரிமையாளர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வீட்டை இடிக்க விடாமல் தர்ணா செய்தனர், அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர் இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பொக்லின் மூலம், வீட்டை இடித்து ஆக்கிரப்பை அகற்றினர். அதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story





