திமுக ஒன்றியசெயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்

திமுக ஒன்றியசெயலாளர் மீது தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பண மோசடி புகார்
தருமபுரி மாவட்டம் , பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ரூ.85 லட்சம் பணம் ஏமாற்றியதாக, அவரது நண்பர் பாலச்சந்திரன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை புகார் அளித்தார். பணம் மற்றும் மிரட்டல் விவகாரம் குறித்து அன்பழகன் மீது நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story