ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய நாடக மேடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.
Karur King 24x7 |28 Aug 2024 10:01 AM GMT
ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய நாடக மேடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.
ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய நாடக மேடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, கடவூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆதனூர் ஊராட்சியில் உள்ள கீழ மேட்டுப்பட்டி ஆதி திராவிடர் காலனியில், ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பாக, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நாடக மேடையை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் பிரேம்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கஸ்தூரி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய நாடக மேடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story