பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாநகரில் 850 போலீசார் ரோந்து பணி

பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாநகரில் 850 போலீசார் ரோந்து பணி
குற்றங்களை தடுக்க நடவடிக்கை
பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. மேலும், நாளை (புதன்கிழமை) மாட்டு பொங்கலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலத்தில் வசிக்கும் வெளியூர் மக்கள் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் சேலம் மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார், ஊர்க்காவல் படையினர், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாநகரில் 850 போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், இரவு நேர வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ள பகுதியில் இருக்கும் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story