பேச்சிப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு

X
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரண்டு போக சாகுபடி நடைபெறுகிறது. கன்னி பூ சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. ஜூன் முதல் வாரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜூன் 1ம் தேதி பாசனத்திற்காக அணைகளை திறக்க உத்தரவிட்டார். இதயடுத்து இன்று காலை 10:30 மணிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து 850 கன அடி தண்ணீர் கோதையார் இடது கரை கால்வாயில் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் மதகை திறந்து வைத்தார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் பொன் செல்வகுமார், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

