பெரியநாயக்கன்பாளையம்: 86 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் !

பெரியநாயக்கன்பாளையம்: 86 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் !
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 86 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் நேற்று அத்திபாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (48) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 86 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Next Story