திருச்செங்கோடு தாலுக்கா87 கவுண்டம்பாளையம் ஊராட்சி குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியில் 21 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் இருந்த 48 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா
Tiruchengode King 24x7 |7 Feb 2026 7:47 PM ISTதிருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியில் 21 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் இருந்த 48 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முயற்சியால் வழங்கப்பட்டது
திருச்சங்கோட்டை அடுத்த குமாரமங்கலம் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்த 48 குடும்பங்களுக்கு கடந்த 2005 பெருமழை பெய்துவெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது 21 வருடங்களுக்கு வீடுகளை இழந்து தத்தளித்தவர்களுக்குஇந்திரா நகர் பகுதியில் இடம் வழங்கப்பட்டது ஆனால்அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை இதனால் எந்த வித வசதிகளையும் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தினருக்கு பலமுறை மனு கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்பொது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக கூட்டணியில் போட்டியிட்டார் அப்போது வாக்கு கேட்க வந்தவர் நிச்சயம் பட்டா பெற்று தருவேன் என கூறி வாக்குறுதி அளித்திருந்தார் அதன் அடிப்படையில் கடந்த பல வருடங்களாக முயற்சி செய்து தற்போது 48 குடும்பங்களுக்கும்தல 10 லட்சம் மதிப்புள்ள இடத்திற்குதற்போது இலவச வீட்டு மனை பட்டாவழங்க ஏற்பாடு செய்து கம்ப்யூட்டர் பட்டாவாக இன்று பொது மக்களுக்கு வழங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திரா நகர் பகுதியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு 48 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின், வட்டாட்சியர் இருஷ்ணவேணி, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னாள் ஒன்றிய செயலாளர் சேரன் சக்திவேல், கொமதேக மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், தீரன் தொழிற்சங்க பேரவை தலைவர் கொங்கு கோமகன் மாவட்ட இணை செயலாளர் லாவண்யா ரவி. மாவட்ட அமைப்பு செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது. 21 வருடங்களாக பட்டாவுக்காக ஏங்கி வந்த 48 குடும்பத்தினரின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் இன்று பட்டா வழங்கப் பட்டுள்ளது. 10 லட்சம் மதிப்புள்ள இந்த பட்டா உங்களுக்கு வங்கிக்கடன், வீடு கட்ட கடன் வாங்க மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 138 முறை சட்டமன்றத்தில் பேசி பல்வேறு திட்டங்களை பெற்றுள்ளேன். கலைக்கல்லூரி ஐடிஐ, புதிய தேர்கள், தேரோடும் வீதியில் புதைவட மின்கம்பி, வையப்ப மலைக்கு பாதை அமைத்துள்ளோம் இதனால் 300 பேர் மட்டுமே தைப்பூசத்திற்கு கோவிலுக்கு வந்த நிலைமாறி இந்த தைப்பூசத்திற்கு 7 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ரோப்கார் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குமாரமங்கலம் பள்ளிக்கு 2 கூடுதல் கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம் உள்கட்ட சாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம். பழனிக்கு பேருந்து கோவைக்கு பேருந்து பல்வேறு நகர பேருந்து தடங்கள் அமைத்து உள்ளோம் என கூறினார் பட்டா பெற்றவர்களுடன் குழுப் புகைப் படம் எடுத்துக் கொண்டார். குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற 87 கவுண்டம் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுபா, மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோருக்கு ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



