பெரியாண்டாங் கோவில் ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூ.8750 பறிமுதல்.
![Karur King 24x7 Karur King 24x7](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பெரியாண்டாங் கோவில் ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூ.8750 பறிமுதல்.
பெரியாண்டாங் கோவில் ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூ.8750 பறிமுதல். கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக பணம் வைத்து சூது ஆடுவது குறித்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 25ஆம் தேதி இரவு 9- மணி அளவில், பெரியாண்டாங் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் சின்னான்டாங் கோவில், மேட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன், திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ், நொய்யல் குறுக்கு சாலை பகுதியை சேர்ந்த செல்வராஜ், குளித்தலை அண்ணாநகர் திருஞானம், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை தேவதானம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 8750-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story