கரூர் மாவட்டத்தில் 87.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 87.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 87.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு வளி மண்டலம் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழக வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில்10.00 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 3.00 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 13.00 மில்லிமீட்டர், க. பரமத்தியில் 10.80 மில்லி மீட்டர், குளித்தலையில் 4.00 மில்லி மீட்டர், தோகை மலையில் 13.00 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 9.50 மில்லி மீட்டர், மாயனூரில் 12.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 5.20 மில்லி மீட்டர், கடவூரில் 5.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 2.00 மில்லி மீட்டர் என மொத்தம் 87.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 7.29 மில்லி மீட்டர் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story