எடப்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட 880 கிலோ கஞ்சா

X
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மற்றும் பொது போக்குவரத்துகளை பயன்படுத்தி சமூக விரோதிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா உள்பட போதைப்பொருட்களை கடத்தி வருவதை தடுக்கும் நோக்கில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ததுடன், அவர்கள் கடத்தி வந்த போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 880 கிலோ கஞ்சாவை நீதிமன்ற உத்தரவின் பேரில் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி-சங்ககிரி பிரதான சாலையில், கோணமோரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலைக்கு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு மாநகர துணை கமிஷனர் கீதா முன்னிலையில் போலீசார் கஞ்சா பொட்டலங்களை நிறுவனத்தின் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கஞ்சா பொட்டலங்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகும் வரை அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story

