கரூரில் 888 தூய்மை பணியாளர்களுக்கு 5 கோடியே 78 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்.

கரூரில் 888 தூய்மை பணியாளர்களுக்கு 5 கோடியே 78 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்.
கரூரில் 888 தூய்மை பணியாளர்களுக்கு 5 கோடியே 78 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர். சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதன்படி தூய்மை பணியாளர்களுக்கு சொந்தமாக கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து இந்த திட்டம் தமிழுகம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 888 தூய்மை பணியாளர்களுக்கு 5 கோடியே 78 லட்சம் மதிப்பில் வீட்டுமனை பட்டா, தொழில் தொடங்குவதற்கான வங்கி கடனுதவி, தையல் இயந்திரம், மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ ஆகியோர் வழங்கினர். முன்னதாக சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள. மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியாக தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மதிய உணவு உட்கொண்டனர்.
Next Story