கரூர் மாவட்டத்தில் 88.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 88.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 88.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்மேலும் ஒரு வளிமண்டலம் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகம் முழுவதும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்துள்ளது. மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன்பு அறிவிப்பு செய்துள்ளது. அந்த அறிவிப்பில் அரவக்குறிச்சியில் 11.40 மில்லி மீட்டரும், அனை பாளையத்தில் 5.00 மில்லி மீட்டரும் , க.பரமத்தியில் 17.40 மில்லி மீட்டரும் , தோகைமலையில் 5.00 மில்லி மீட்டரும் ,மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சபட்டியில் 25.00 மில்லி மீட்டரும், கடவூரில் 5.00மில்லி மீட்டர் , பாலவிடுதியில் 8.00 மில்லி மீட்டரும், மயிலம்பட்டியில் 12.00 மில்லி மீட்டர் என மொத்தம் 88.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானதாகவும், இதனுடைய சராசரி அளவு 7.40 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story