ராயனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாநகர குழுவின் 9-வது மாநாடு நடைபெற்றது.
ராயனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாநகர குழுவின் 9-வது மாநாடு நடைபெற்றது. கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கரூர் மாநகர குழுவின் 9வது மாநாடு கட்சியின் மூத்த உறுப்பினர் அங்கமுத்து தலைமையில் நடைபெற்றது. முன்னதாக காலமான கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி, அஞ்சலி செலுத்தினர். இந்த கூட்டத்தில் மாநகர குழு உறுப்பினர் தியாகராஜன், சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாநகர செயலாளரும், மாநகராட்சி உறுப்பினருமான தண்டபாணி, மாநகர குழு பொருளாளர் ஹோச்சுமின், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர குழு உறுப்பினர் நீல மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், முன்னாள் மாநில குழு உறுப்பினர் ரத்தினவேலு வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு நிறைவுறை நிகழ்த்தினார். கூட்டத்தில் கட்சி குறித்து விவாத தொகுப்புரையும், புதிய மாநகர குழு செயலாளர்கள் தேர்வு,மாவட்ட மாநாடு பிரதிநிதிகள் தேர்வு நடைபெற்றது. இன்று மாலை வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டின் நிறைவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






