தமிழ்நாடு வருவாய்த்துறை 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மூன்றாம் கட்டப் போராட்டம் நடைபெற்றது
Tirupathur King 24x7 |28 Nov 2024 8:43 AM GMT
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மூன்றாம் கட்டப் போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மூன்றாம் கட்டப் போராட்டம் நடைபெற்றது தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவழக வருவாய்த்துறை ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் மூன்றாம் கட்ட போராட்டமாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் அருள்மொழி வர்மன் தலைமையில் அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் முக்கிய கோரிக்கைகளாக அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல் பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
Next Story