கரூர்-9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

கரூர்-9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
கரூர்-9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், நில அளவை களப்பணியாளர்களின் 9- அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 3 கட்ட போராட்டத்தின் முதல் கட்டமாக இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், மண்மங்கலம், புகலூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர் ள்ளிட்ட 7-தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் 39 நில அளவை களப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில், மாவட்ட துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில், கோட்ட தலைவர் சங்கர் உள்ளிட்ட ஆறு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும், தரமிறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவியினை பெற்று, தகுதி உள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வலியுறுத்தியும், நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றிப்பின் நிலுவை கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story