காங்கயத்தில் வெறி நாய்கள் கடித்து 9 ஆடுகள் பலி

காங்கயத்தில் வெறி நாய்கள் கடித்து 9 ஆடுகள் பலி
X
காங்கயத்தில் வெறி நாய்கள் கடித்து 9 ஆடுகள் பலி தொடர்ந்து விவசாயிகள் பாதிப்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வெறிநாய்கள் சேர்ந்து கூட்டமாக கடித்ததில் செம்மறி ஆடுகள் பலியாகி உள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில் காங்கேயம் அடுத்த படியூர் கிராமம் குலந்தாங்காட்டு தோட்டத்தில் குருமூர்த்தி (வயது 45) என்பவர் 30 செம்மறி ஆடுகள் மேச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஆட்டுக் கூட்டத்தில் வெறிநாய்கள் கூட்டம் புகுந்து கடித்ததில் குட்டிகள் உட்பட 14 ஆடுகள் படுகாயம் அடைந்தது. அதில் ஒரு ஆடு மற்றும் எட்டுக்குட்டிகள் அங்கேயே இறந்து விட்டது. படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தனர்.
Next Story