பரமத்திவேலூரில் ரூ.9 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்.

பரமத்திவேலூரில் ரூ.9 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்.
X
பரமத்திவேலூரில் ரூ.9 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
பரமத்திவேலூர், ஜன.3- பொத்தனூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் நடை பெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 475 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.146.67-க்கும், குறைந்தபட்சமாக ரூ.133.89-க்கும், சராசரியாக ரூ.145.10-க்கும் ஏலம் போனது. னது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.127.88-க்கும், குறைந்த பட்சமாக ரூ.103.99-க்கும், சராசரியாக ரூ.115.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 61 ஆயிரத்து 175-க்கு வர்த்த கம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 350 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தி ருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.152.34-க்கும். குறைந்தபட்சமாக ரூ.136.99-க்கும், சராசரியாக ரூ.142.89-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ.125.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.106.99-க்கும், சராசரியாக ரூ.118.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 66 ஆயிரத்து 876-க்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங் காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story