அரசு பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் பணிகள் எம் எல் ஏ துவக்கினார்

X
குமரி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, முஞ்சிறையில் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காலை வழிபட்டு கூட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர்கள் நலன்கருதி அலங்கார கற்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 9 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த அலங்கார கற்கள் அமைக்கும் பணியினை நேற்று ராஜேஷ்குமார் எம் எல் ஏ துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

