யுனானி மருத்துவத்தின் 9-வது தேசிய யுனானி தின விழாவை முன்னிட்டு

நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்
நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் இயங்கும், யுனானி மருத்துவத்தின் 9-வது தேசிய யுனானி தின விழாவை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜோதி சாந்தகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் அப்துல் மஜீத் ஆகியோர் தலைமை வைத்தார். முகாமில், சிறப்பு அழைப்பாளராக நாகை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ முகமது ஷா நவாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது மருத்துவ துறையில் பல்வேறு வகையான மருத்துவங்கள் உள்ளன. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மக்களின் ஒரே நோக்கம், நோய்கள் முழுவதும் பூரணமாக குணமடைய வேண்டும் என்பதுதான். அப்படி ஒரு மருத்துவத்தின் ஒரு பகுதியே யுனானி மருத்துவமாகும். யுனானி மருத்துவம் தீராத நோய்களையும் தீர்க்கும் தலைசிறந்த மருத்துவமாகும். இந்த மருத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதை மருத்துவர்கள் நீங்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவர் அவர் பேசினார். முகாமில், யுனானி டாக்டர்கள் முசம்மில் அகமத், அயீஷா, அதாவுல்லா, ஷீரின் பேகம், சயித் தாரீம் உள்பட நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவ மருந்தாளுநர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story