சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 9 புதிய வழித்தடங்களில் பஸ்கள் சேவையை

X
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் பஸ்கள் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு ஆகிய 9 பஸ் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதாவது, சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 ரோடு, ஏ.வி.ஆர். ரவுண்டானா, கொண்டலாம்பட்டி பைபாஸ் வழியாக மல்லூர் வரையிலும், சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக கன்னங்குறிச்சி வரையிலும், சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அக்ரஹாரம் வழியாக அயோத்தியாபட்டணம் வரையிலும், மகுடஞ்சாவடியில் இருந்து எர்ணாபுரம், நம்பியாம்பட்டி வழியாக இளம்பிள்ளை வரையிலும், எடப்பாடியில் இருந்து எருமைப்பட்டி, கொங்கணாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி வழியாக கொங்கணாபுரம் வரையில் இயங்கும் வகையில் 5 புதிய வழித்தடங்களில் பஸ்கள் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தலைவாசல் முதல் ஆத்தூர் வரை இயக்கப்பட்ட பஸ், தற்போது புத்தூர் வரையிலும், ஆத்தூரில் இருந்து வாழப்பாடி வரை இயக்கப்பட்ட பஸ் தற்ேபாது புனல்வாசல் வரையிலும், தாசனூரில் இருந்து ஓமலூர் வரை இயக்கப்பட்ட பஸ் தற்போது தாசனூரில் இரவு தங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலத்தில் இருந்து தெர்மல் வழியாக மேட்டூருக்கு இயக்கப்பட்ட பஸ் தற்போது சேலம் கேம்ப் வழியாக செல்லும் வகையிலும் என 4 பஸ்கள் சேவை வழித்தட மாற்றம் செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
Next Story

