குமரிக்கு நடந்து வந்த 9-ம் வகுப்பு மாணவி

X
அரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (வயது 14). இவர் பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தை யும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடியே வர திட்டமிட்டார். அதன்படி அவர் கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி காஷ்மீரில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கினார். அவருக்கு பாதுகாப்பாக அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவருடன் வந்தனர். இவர் டெல்லி உத்தரபிரதேசம், அரியானா,மத்திய பிரதேசம் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களை கடந்து நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார். அவர் இந்த சாதனை ஓட்ட பயணத்தை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் நிறைவு செய்தார். காஷ்மீரில் இருந்து மொத்தம் உள்ள 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 98 நாட்களில் ஓடியே கடந்து வந்துள்ளார். இவரை பலரும் பாராட்டினர்.
Next Story

