விதிமுறை மீறிய 9  லாரிகளுக்கு அபராதம் 

விதிமுறை மீறிய 9  லாரிகளுக்கு அபராதம் 
X
தக்கலை
குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கும் வாகனங்கள், மது அருந்தி ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லுபவர்கள், பைக்கில் ஆபத்தான சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிடுபவர்கள், போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.        இதன் பேரில் தக்கலை காவல் உப கோட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தக்கலை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் தக்கலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணிக்கு முன்பாக இயக்கப்பட்ட பாரம் இல்லாத கனரக  லாரிகளுக்கு அபராதம் விதித்தனர். அந்த வகையில் 9 லாரிகளுக்கு ரூபாய் 27 ஆயிரம் விதித்து, அதற்கான இ செல்லான்  நோட்டீஸ் வாகனங்களில் ஒட்டப்பட்டது.
Next Story