கிருஷ்ணகிரி அருகே அனுமதி இன்றி எருதுவிடும் விழா 9- பேர் மீது வழக்கு.

X
கிருஷ்ணகிரி அருகே எர்ரபையனப்பள்ளி பகுதியில் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும் விழா நடந்ததாக அகரம் கிராம வி.ஏ.ஒ. ஹரிதாஸ் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் எர்ரபையனப்பள்ளியை சேர்ந்த கதிரவன் (50) மற்றும் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

