அரக்கோணத்தில் 9 பைக்குகள் பறிமுதல்

X
அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் நேற்று பழனி பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை இட்டதில், அது திருட்டு பைக் என்பது தெரிந்தது. போலீசார் விசாரணையில், அவர்கள் பல்வேறு இடங்களில் 9 பைக்குகள் திருடியது தெரிந்தது. போலீசார் எலத்தூரைச் சேர்ந்த சங்கர், சிதம்பரம் ஆகியோரை கைது செய்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Next Story

