நிலத்தை அளந்து தனிப்பட்டா கேட்ட விஜயகுமாரி என்ற பெண்ணிடம் ரூ9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.

X
NAMAKKAL KING 24X7 B |12 April 2025 10:13 PM ISTநாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்பி சுபாஷினி தலைமையிலன காவல் துறையினர் சனிக்கிழயைன்று சர்வேயர் பூபதியை கைது செய்தனர்.
திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவரது நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிபட்டாவாக மாற்றி தர திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சர்வேயர் பூபதி(36) 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்பி சுபாஷினி தலைமையிலன காவல் துறையினர் சனிக்கிழயைன்று சர்வேயர் பூபதியை கைது செய்தனர் திருச்செங்கோடு நகரத்தை சேர்ந்த மஜீத் தெருவை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு சொந்தமான கொல்லப்பட்டி பகுதியில் உள்ள நிலத்தை கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டவாக மாற்றி தர அவரது மனைவி விஜய குமாரி 36 என்பவரிடம் ரூ 9 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. நிலத்தை அளந்து விட்டு அலுவலகத்தில் வந்து லஞ்சம் வாங்கிய போது; விஜயகுமாரியின் புகாரின் பேரில் இதுகுறித்து ஏற்கனவே தகவல் அறிந்திருந்த, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பூபதியை பிடித்தனர். கைது செய்யப் பட்ட பூபதி நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார். அங்கு நீதிபதி விஜிய குமார் பூபதியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
