ஆற்காடு அருகே 9 கிலோ கஞ்சா பறிமுதல்

X
ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி பகுதியில் ஆற்காடு தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஒடிசா மாநிலம் மனோஜ் பஹாரா (வயது 26), அரக்கோணம் தாலுகா சின்ன பாராஞ்சி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (35) என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில் 9 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

