கோவை: பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி !

X
சேலத்தில் இருந்து குமாரபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், தூக்கத்தில் இருந்த தந்தையின் கையில் இருந்து தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பேருந்து குமாரபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்படிக்கட்டுக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவரின் கையில் இருந்து குழந்தை தவறி கீழே விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், வழியிலேயே உயிர் பிரிந்தது. இந்த விபத்து குறித்து தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தந்தையின் கவனக்குறைவு மற்றும் பேருந்தின் முன்பக்க கதவு மூடப்படாமல் இருந்தது ஆகிய காரணங்களால் விபத்து நேரிட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பணியில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

