மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 9வது இடம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 9வது இடம்
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 318 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 36 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர் இதில் 9 ஆயிரத்து 610 மாணவிகளும், 10,426 மாணவர்களும் பொது தேர்வை எழுதிய நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது இதில் தர்மபுரி மாவட்டத்தில் மாணவர்கள் 95.23 சதவீதமும் மாணவிகள் 97.48% என மொத்தமாக மாவட்டத்தில் 96.31 சதவீதம் பெற்று மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இது குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா செய்தியாளர்களிடம் கூறிய போது தர்மபுரி மாவட்டம் கடன் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்தலில் 28 வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு மாநில அளவில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது மேலும் மாநிலத்தில் 38 மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் 28 வது இடத்தில் இருந்து தற்போது 7வது இடத்திற்க்கு முன்னேறி உள்ளது என தெரிவித்தார் மேலும் இந்த சாதனைக்கு இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
Next Story