தாரகை கத்பட் எம்.எல்.ஏ. உட்பட 9 பேர் கைது

X
குமரியில் நான்கு வழிச்சாலை பணியானது கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கியது. இதில் காப்புக்காடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த இப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் தங்க நாற்கரச் சாலை பணியை தொடங்கவிடாமல் முடக்கிப் போட்டனர். இந்நிலையில் இழப்பீடு வழங்காமல் திடீரென்று இன்று நான்கு வழிச்சாலை பணியை துவங்க திட்ட அதிகாரி வேல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் காப்புக்காடுக்கு வந்தனர். இதை அறிந்த விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பபட் தலைமையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், காங்கிரஸ் கட்சியினரும் நிலத்துக்கு போதிய இழப்பீடு கிடைக்காத மக்களும் வந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். உடனே சம்பவ இடத்திற்கு குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கௌதம் தலைமையில், புதுக்கடை போலீசார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து போலீஸ் தலைமையில் தங்க நாற்கரச் சாலைக்கான பணி துவங்கப்பட்டது. உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ யும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கோஷம் போட்டனர். போலீசார் தாரகை கத் பட் எம்எல்ஏ உட்பட 9 பேரை கைது செய்தனர். அதன் பின்னர் தங்க நாற்கரச் சாலை பணி துவங்கியது.
Next Story

