ஜூலை 9 முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் வருகை
திருவாரூர் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட பாகநிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டமானது திமுக திருச்சி மண்டலத்திற்கு தேர்தல் மேலிட பொறுப்பாளரும் , நகராட்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது , இதில் அவைத்தலைவர் தன்ராஜ் , தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா , டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன் , தாட்கோ தலைவர் இளையராஜா , தொகுதி பொறுப்பாளர் எஸ்.கே. வேதரத்தினம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் , சார்புஅணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் , கூட்டத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியதாவது - தமிழகத்தின் வளர்ச்சி , ஒட்டுமொத்த தமிழர்களின் வளர்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் நமது கழகத் தலைவர் ஆட்சி தொடரவேண்டும் என பேசினார், இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது - இப்போது சேர்க்கும் உறுப்பினர்கள் சரியான உறுப்பினர்களாக இருக்க வேண்டும் , ஆகவே தான் இந்த பணியை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார் , இந்த தேர்தல் சரியான தருணம் , ஜெயலலிதா இருக்கும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லை என்று சொன்னார் , அவரும் தேர்தலில் தோற்று போனார் , இன்றைய தேர்தல் எப்படி இருக்கும் என்று சொன்னால் அதிமுக - பிஜேபி கூட்டணி என்பது ஒரு இணக்கமான கூட்டம் இல்லை , நம்முடைய கூட்டணி சிறப்பான கூட்டணி , இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது - வரும் 9 ஆம் தேதி தமிழக முதல்வர் திருவாரூர் வருகிறார் , கலைஞர் சிலையை திறக்க வைக்கிறார் , 10 ஆம் தேதி நலத்திட்ட உதவிகளையும், முடிந்த பணிகளை துவக்க வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் , நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய வடிவிலான உறுப்பினர் சேர்க்கை திட்டம் குறித்து நகர ,பேரூர் பாகநிலை முகவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அணிசெயலாளர் டி ஆர் பி ராஜா பயிற்சி அளிக்கும் கூட்டம் தற்போது நடைபெற்றது ,புதிய உறுப்பினர் சேர்க்கும் திட்டத்தை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார் ,கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு ? திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம் , நீங்கள் நினைப்பது போல ஒன்றுமில்லை எல்லோரும் ஒன்றாக தான் உள்ளோம். சிவகங்கை நடைபெற்ற லாக்கப் டெத் பற்றிய கேள்விக்கு ? முதலமைச்சர் கவனத்திற்கு போனால் முனைப்புடன் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
Next Story



