வாணியம்பாடி அருகே ஒரே கிராமத்தில் நடைப்பெற்ற 9 கோவில் கும்பாபிஷேக விழா

வாணியம்பாடி அருகே ஒரே கிராமத்தில் நடைப்பெற்ற 9 கோவில் கும்பாபிஷேக விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரே கிராமத்தில் நடைப்பெற்ற 9 கோவில் கும்பாபிஷேக விழா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சுந்தரேஸ்வரர் - மீனாட்சியம்மன் கோவில், ஐயப்பசுவாமி, கோவில், காலபைரவர், கோவில், ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில், ஓம்சக்தி அம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், மற்றும் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட செல்வ விநாயகர் ஆலய திருக்கோவில், மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி, உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய 9 கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது, முன்னதாக கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, கணபதி வேள்வி பூஜை, வேள்வி கலச பூஜை, மூலிகை வேள்வி, கணபதி ஹோமம், நவகிரக பூஜை, வருண பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைப்பெற்றது, புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது, இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story