கீழ்குளத்தில் ரூ. 9 லட்சத்தில் சாலை திறப்பு

கீழ்குளத்தில் ரூ.  9 லட்சத்தில்  சாலை திறப்பு
X
புதுக்கடை
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கீழ்குளம் பேரூராட்சியில் உள்ள காட்டுவிளை - பறம்பு மண் சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையை சீரமக்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த சாலையை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜகிளன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் அனிதா ராஜகிளன், மார்க்ரெட், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜேஷ், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story