கரூர்-கொலை வழக்கில் கைதான 9 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கரூர்-கொலை வழக்கில் கைதான 9 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம் , வாங்கல் பகுதியில் நிலத்தகராறு தொடர்பாக மணிவாசகம் என்பவர் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் , கவியரசன் , விவேக் , மணிகண்டன் , சந்திரபிரகாஷ் , கிருஷ்ணா , நிஜாமுதீன் , செந்தமிழ் ,செந்தில் ராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த குற்ற செயல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தங்கையா அளித்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் 9- பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் 9 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story





