அரியலூரில் சிஐடியு 9-வது மாவட்ட மாநாடு.

X
அரியலூர், ஆக.17 - அரியலூரில் சி ஐ டி யூ வின் ஒன்பதாவது மாவட்ட மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர் எஸ்டி மேரீஸ் திருமண மஹால் திருமண மண்டபத்தில் (சிஐடியு) இந்திய தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாநில செயலாளர் தேவமணி, மாநில துணைத்தலைவர் எஸ்.ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், வி.தொ.ச சங்க மாவட்ட செயலாளர் ஏ.கந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.துரைசாமி, மாவட்ட பொருளாளர் கே.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் எம்.சந்தானம் வரவேற்று பேசினார்.முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் வி.ராஜாமணி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாநாட்டில் செங்கொடியை மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம் ஏற்றி வைத்தார்.. மாநாட்டுக்கு த.சகுந்தலா, பி.நீலமேகம், எஸ். மெய்யப்பன், பி.சி.தர்மராஜ், இ.ரங்கராஜ், எம்.முருகன், பி.அழகுதுரை ஆகிய முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறைகளை பாதுகாத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை குறைக்க வேண்டும், ஆன்லைனில் ஆட்டோ தொழிலாளர் மீது அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலைகளில் குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 28 ஆயிரம் வழங்கிட வேண்டும், சிமெண்ட் ஆலை தொழிலாளர்களுக்கு சிமெண்ட் ஊதிய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு சிமெண்ட் ஆலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலையை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இதில் துரை அருணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் சி ஐ டி யு மாவட்ட தலைவராக க.சகுந்தலாவும், மாவட்ட செயலாளராக பி.துரைசாமியும், மாவட்ட பொருளாளராக ஆர் ரவீந்திரனும் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து ஐந்து துணைத் தலைவர்களும் ஐந்து துணை செயலாளர்களும் 23 மாவட்ட குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் அருண்பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
Next Story

