பால் பண்ணையில் வைத்திருந்த வைக்கோல் படைப்பில் தீவிபத்து - சுமார் 9 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படைப்புகள் தீயில் முற்றிலும் ஏரிந்து சேதம்.*

X
விருதுநகர் பால் பண்ணையில் வைத்திருந்த வைக்கோல் படைப்பில் தீவிபத்து - சுமார் 9 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படைப்புகள் தீயில் முற்றிலும் ஏரிந்து சேதம். விருதுநகர் - பாவாலி சாலையில் கெளசிகா மகா நதியில் நீர் வளத்துறை வைப்பாறு கோட்டம் மூலம் தமிழக அரசால் சுமார் 20 கோடி. 40 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாறும் பணி ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நடைபெற்ற்று வருகிறது. இந்த கெளசிகா மகாநதியில் உள்ள தேவையற்ற கழிவு பொருள்கள் மீது யாரோ தீ வைத்துள்ளதாக தெரிகிறது இந்த தீயானது. காற்றில் பரவி அருகில் உள்ள விருது நகர் - பாவாலி சாலையில் அன்னை சிவகாமிபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவருக்கு சொந்தமான மாட்டு பால் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த வைக் வைக்கோல் படைப்புகள் மீது பற்றியுள்ளது. இந்த தீவிபத்தில் 10 வைக்கோல் படைப்புகளும் முற்றிலும் எரிந்து சேதமாகின மேலும் இதனுடைய மதிப்பு சுமார் 9 லட்சம் எனக் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக உயிர் சேகம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இந்த தீவிபத்து குறித்து மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாராண மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

