விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
X
விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள். ------ விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்; ஆகியோர் இன்று (26.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். பின்னர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மண்டலத்தில் தற்போது 457 பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இராஜபாளையம் -மதுரை - செங்கோட்டை வழித்தடத்திலும், இராஜபாளையம் - செங்கோட்டை -பழனி வழித்தடத்திலும், அருப்புக்கோட்டை - பழனி வழித்தடத்திலும், சிவகாசி - மதுரை - திருச்சி வழித்தடத்திலும், இராஜபாளையம் - மதுரை -திருச்சி வழித்தடத்திலும், சிவகாசி - மதுரை -திருச்சி வழித்தடத்திலும், அருப்புக்கோட்டை -மதுரை -திருச்சி வழித்தடத்திலும், கோவில்பட்டி- மதுரை -திருச்சி வழித்தடத்திலும், இராஜபாளையம் -மதுரை -திருச்சி வழித்தடத்திலும் ஆகிய 9 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மண்டலம் மூலம் தினசரி 2 இலட்சம் கிலோ மீட்டர் இயக்கம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 176 மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது 222 பேருந்துகளாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் நாளொன்றுக்கு ஒரு பேருந்திற்கு சராசரியாக 1003 மகளிர்கள் பயணம் செய்கின்றனர். மேலும், 85757 பள்ளி மாணவ, மாணவியர்களும், 348 மாற்றுத்திறனாளிகளும் இலவச பயண அட்டைகள் மூலம் பயன்பெறுகின்றனர் என தெரிவித்தனர்.
Next Story