கிருஷ்ணகிரியில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சந்திரன், மாதப்பன் ஆகியோா் தலைமை தாங்கினர். இதில் 2003 ஏப்ரல் முதல் தேதி பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது. பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்தனர்.
Next Story

