கோவை அவிநாசி மேம்பாலம் அக்டோபர் 9-ம் தேதி திறப்பு - அமைச்சர் ஆய்வு !

நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது – அக்டோபரில் திறப்பு விழா.
கோவை காந்திபுரத்தில் பெரியார் நூலகம் மற்றும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பெரியார் நூலகம் பொங்கலுக்கு முன் திறக்கப்படும் என்றும், ரூ.1791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அவிநாசி மேம்பாலம் அக்டோபர் 9-ம் தேதி முதலமைச்சர் திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார். பணிகள் ரயில்வே அனுமதி, மின்சாரம் மற்றும் நில எடுப்பு காரணமாக தாமதமானதாகவும், தனியார் ஹோட்டல் தொடர்பான வழக்கு பாலம் திறப்பிற்கு தடையாகாது என்றும் விளக்கம் அளித்தார்.
Next Story