முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை – அக்டோபர் 9ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை – அக்டோபர் 9ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்
X
அவினாசி ரோடு புதிய மேம்பால திறப்பு விழாவை முன்னிட்டு கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கு தற்காலிக மாற்று வழிகள் அறிவிப்பு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 9ஆம் தேதி கோவையில் அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க வருகிறார். இதையொட்டி நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. நீலாம்பூர் வழியாக நகருக்குள் வரும் கனரக மற்றும் பேருந்துகள் எல்&டி பைபாஸ் – சிந்தாமணிபுதூர் – சிங்காநல்லூர் – காந்திபுரம் வழியாக மாற்றி விடப்படுகின்றன. இலகுரக வாகனங்கள் தொட்டிபாளையம் – காளப்பட்டி – விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் செல்லலாம். அதேபோல், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் புளியகுளம் – ராமநாதபுரம் – எல்&டி பைபாஸ் வழியாக இயக்கப்படும். கொடீசியா, தண்ணீர் பந்தல், காந்தி மாநகர் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, மதுக்கரை, உக்கடம் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு சர்வீஸ் சாலை, போத்தனூர், செட்டிபாளையம், ஈச்சனாரி வழியாக மாற்று வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Next Story