முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், அதன் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா மற்றும் பெரியார் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக ஜெயலலிதாவின்
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், அதன் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா மற்றும் பெரியார் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அணி பொறுப்பாளர்கள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story