ராசிபுரம் அருகே தனியார் மருந்தகம் முன்பு 9 பவுன் நகையுடன் நின்ற ஸ்கூட்டர் திருட்டு: போலீசார் விசாரணை...

X
Rasipuram King 24x7 |6 Feb 2026 9:54 PM ISTராசிபுரம் அருகே தனியார் மருந்தகம் முன்பு 9 பவுன் நகையுடன் நின்ற ஸ்கூட்டர் திருட்டு: போலீசார் விசாரணை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பூசாரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் அருண்குமார் (வயது 35). இவரது மனைவி ராஜேஸ்வரி, 35. இவர்கள் காக்காவேரியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், ஏற்கனவே அடகு வைத்திருந்த 6 பவுன் தாலி செயின் மற்றும் 3 பவுன் டாலர் செயின் என மொத்தம் 9 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளார். அதை ஸ்கூட்டரின் பெட்டியில் வைத்து, மளிகை கடைக்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த அருண்குமாரின் தந்தை பச்சமுத்து(65). அருகில் உள்ள மெடிக்கலுக்கு சில பொருட்களை வழங்க ஸ்கூட்டரை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் சாவியுடன் நிறுத்திவிட்டு, மருந்தகத்திற்கு சென்று பொருட்களை வழங்கியுள்ளார். அதை நோட்டமிட்ட மர்மநபர்கள், முதியவர் பச்சமுத்துவின் கண் முன்னே நகையுடன் இருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
