ராமநாதபுரம் பறக்கும் படை வாகன தணிக்கை நடைபெற்ற போது 90 கிலோ அரிசி முட்டைகள் பறிமுதல்

கேணிக்கரை பகுதியில் பறக்கும் படை தாசில்தார் தமீம்ராஜா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் கேணிக்கரை பகுதியில் பறக்கும் படை தாசில்தார் தமீம்ராஜா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்பொழுது ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் தனியார் பள்ளி அருகே ஒரு வீட்டில் இருந்து சாக்கு மூட்டைகளை வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர். தாசில்தாரை கண்டவுடன் தப்பித்து ஓடினார். அதனை தொடர்ந்து சோதனை செய்ததில் 90 அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து சிவில் சப்ளை குற்றப் புலனாய்வுப் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். துணைதாசில்தார் பிரசாத், ஆர்.ஐ முத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story