அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்தள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.

X
NAMAKKAL KING 24X7 B |1 Aug 2025 6:05 PM ISTநாமக்கல் மாவட்டத்தில் ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்தள்ளது – மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தகவல்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, லத்துவாடியில் மாவட்ட ஆட்சியர் ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நகர்வோர் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் கூடிய 2.0 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தானிங்கி நவீன பால்பண்ணை அமைக்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில், தமிழ்நாடு அரசு 2022-2023-ம் ஆண்டு பால்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, மானியக்கோரிக்கை எண்-8ன் படி, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களால், நாமக்கல் மாவட்டத்தில் 2.0 இலட்சம் லிட்டர் கையாளும் திறன்கொண்ட தானியங்கி நவீன பால்பண்ணை கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 22.10.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் , பால்பதன ஆலை அமைப்பதற்காக கட்டிட பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கட்டிடப் பணிகளுக்கு ரூ.32.50 கோடியும், இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.57.50 கோடியும் என ரூ.90.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கட்டிட பணிகள் 80 சதவீதம் நிறைவுள்ளது. இயந்திரங்கள் 90 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டு 40 சதவீதம் நிறுவப்பட்டுள்ளது. பால் பண்ணை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் நவம்பர் 2025ல் மேற்கொண்டு டிசம்பர் 2025-க்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். மேலும், ஜனவரி 2026-ல் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பால் பதன ஆலை மூலம் தயாரிக்கப்படும் பால் மற்றும் பால் உப பொருட்கள் மக்கள் பயன்பாட்டிற்கு சென்றடையும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிய பால்பண்ணை பயன்பாட்டிற்கு வரும் பொழுது மாவட்டத்தில் உள்ள 15,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுமார் 4 இலட்சம் நுகர்வோர் பயனடைவார்கள். மேலும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதோடு, 1000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி,, அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டுமானப் பணிகளை நேரில் பார்வயிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் (ஆவின்) மரு.ஆர்.சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) ஐ.சண்முகநதி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
