கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 90 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

X
கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால், இன்று முதல் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காந்திபுரம், பூமார்க்கெட், வடகோவை – மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் வடகோவை அவினாசிலிங்கம் கல்லூரி வழியாக பாரதி பார்க் ரோடு, GCT கல்லூரி ரவுண்டானா, தடாகம் சாலை, வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் வழியாக துடியலூர் – மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும். காந்திபுரம், அவினாசி ரோடு, சங்கனூர் சந்திப்பு, ARC சந்திப்பு, NSR ரோடு போன்ற பகுதிகளில் இருந்து நகருக்குள் மற்றும் மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறை, வாகன ஓட்டிகள் அறிவிக்கப்பட்ட மாற்று பாதைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Next Story

