சிவந்தி ஆதித்தனார் 90வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை

சிவந்தி ஆதித்தனார் 90வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை
X
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24.09.2025) அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.சி. சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story