நாமக்கல் பிரம்மா குமாரிகள் சார்பில் 90வது சிவ ஜெயந்தி – மகா சிவராத்திரி முன்னிட்டு “சிவனும் நானும்” தியான நிகழ்ச்சி!

X
Namakkal King 24x7 |11 Feb 2026 1:51 PM ISTபிப்ரவரி 14.02.2026 முதல் 16.02.2026 வரை (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
90வது சிவ ஜெயந்தி மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல் பிரம்மா குமாரிகள் சார்பில் “சிவனும் நானும்” என்ற ஆன்மீக தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது.சிவனுடன் சில நேரம் அமைதியில் திளைத்து, மனதை இறைவன் சிவனோடு இணைக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்ந்த அமைதியையும் மன நிறைவையும் அளிக்கும் வகையில், தியானம், ஆன்மீக விளக்கங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.இந்த நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 14.02.2026 முதல் 16.02.2026 வரை (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.நாமக்கல் பழைய முன்சிப் கோர்ட் தெருவில், பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள இராஜயோக தியான நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஆன்மீக ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பிரம்மா குமாரிகள் நாமக்கல் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 99947 13692 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Next Story
