ஆயிரக்கணக்கான பக்தர்கள் 900 படிக்கட்டுகளை கடந்து சாமி தரிசனம் செய்தனர்

X
ஆடி கிருத்திகை முன்னிட்டு ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மயிலாடும் மலை மற்றும் கைலாசகிரி மலையில் காவடி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 900 படிக்கட்டுகளை கடந்து சாமி தரிசனம் செய்தனர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள மயிலாடும் மலை திருமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதனை தொடர்ந்து மூலவர் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு பட்டு ஆடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டன முருகப்பெருமானுக்கு கையில் வேல் கொடுத்து பட்டு வேட்டியும் கிரீடம் அணிவித்து சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபா ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர் மேலும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உற்சவர் முருகர் அலங்காரம் பக்தர்களுக்கு சிறப்பாக காட்சி கொடுத்தார் இதில் ஆம்பூர் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்ததிக்கடன் நிறைவேற காவடி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர் இதேபோல் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியில் 900 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள துருகம் அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயிலுக்கு ஆம்பூர் பேர்ணாம்பட்டு குடியாத்தம் மாதனூர் உமராபாத் மற்றும் சுற்றுவட்டார 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற பரணி காவடி பால் காவடி, புஷ்ப காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து 900 படிக்கட்டுகளை கடந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர். மேலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story

