காதப்பாறையில் முதியவரிடமிருந்து செல்போனை களவாடிச் சென்ற இரண்டு இளைஞர்கள் கைது. ரூ.9,000- மதிப்புள்ள செல்போன் மீட்பு.
காதப்பாறையில் முதியவரிடமிருந்து செல்போனை களவாடிச் சென்ற இரண்டு இளைஞர்கள் கைது. ரூ.9,000- மதிப்புள்ள செல்போன் மீட்பு. கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் வயது 63. இவர் அக்டோபர் 25ஆம் தேதி காலை 7 மணி அளவில், அருகில் உள்ள காதப்பாறை - வெண்ணைமலை சாலையில் உள்ள கோபிநாத் என்பவர் வீட்டின் அருகே அவரது சைக்கிளில் மொபைல் போனை வைத்துவிட்டு நின்று கொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் பரணிபாண்டி வயது 19 என்பவரும், அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே வசித்து வரும் மூக்கன் மகன் சூர்யா வயது 19 ஆகிய இருவரும் ஸ்கூட்டி வாகனத்தில் வந்தவாறு, முதியவர் கோபாலகிருஷ்ணன் வைத்திருந்த செல்போனை களவாடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் கோபால கிருஷ்ணன், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பரணிபாண்டி மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்து, களவாடிய ரூபாய் 9000 மதிப்புள்ள ஓப்போ ஆண்ட்ராய்டு செல் போனை மீட்டனர். மேலும்,இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நவம்பர் 6ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story




