கரூர் மாவட்டத்தில் 90.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Karur King 24x7 |16 Nov 2024 3:05 AM GMT
கரூர் மாவட்டத்தில் 90.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 90.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இத்துடன் லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுவிழந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அந்த அறிவிப்பில் கரூரில் 7.80 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 6.00 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 13.00 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 1.40 மில்லி மீட்டர், குளித்தலையில் 5.20 மில்லி மீட்டர், தோகை மலையில் 3.20 மில்லி மீட்டர்,மாவட்டத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரம் மற்றும் மாயனூரில் தலா 21 மில்லி மீட்டர் , பஞ்சபட்டியில் 5.40 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 6.00 மில்லி மீட்டர் என மொத்தம் 90.00 மில்லி மீட்டர் மழை அளவு பெய்துள்ளது. இதனுடைய சராசரி அளவு 7.50 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Next Story